தாலுகா அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை போராட்டம்
ஓட்டப்பிடாரம் அருேக கழிவுநீர் வாறுகாலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருேக கழிவுநீர் வாறுகாலில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நேற்று தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வாறுகால் ஆக்கிரமிப்பு
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அகிலாண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு ஆவரங்காடு கிராமத்தில் 15 வருடங்களுக்கு முன்பு கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது இடத்தில் இருப்பதாக கூறி வாறுகாலை அடைத்துவிட்டார். இதனால் வாறுகாலில் கழிவு நீர் சொல்ல முடியாமல் வீடுகளுக்குள் ேதங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
முற்றுகையிட்டு போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் நிஷாந்தி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வாறுகால் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதுடன், சேதப்படுத்தப்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டினர்.
தாசில்தார் உறுதி
இதுகுறித்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், நில அளவையர் மூலம் கிராம தெருக்களில் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.