சாலைப்பணியை தடுத்து நிறுத்திய கிராமமக்கள்


சாலைப்பணியை தடுத்து நிறுத்திய கிராமமக்கள்
x

விருத்தாசலம் அருகே வேகக்கட்டுப்பாடு அமைக்கக்கோரி சாலைப்பணியை கிராமமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில்விரிவாக்க பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூர் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வேகக்கட்டுப்பாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் வேகக் கட்டுப்பாடு எதுவும் அமைக்காமல் சாலை விரிவாக்கப்பணி நடந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி பாலு தலைமையில் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 நாட்களில் வேகக்கட்டுபாடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story