குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்
x

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூர் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்திற்கு பல நாட்களாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி சொக்கலிங்கபுரம் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை திசையன்விளை- நவ்வலடி சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதை ஏற்று மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.


Next Story