கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x

கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில் குடியிருப்பு, அரசு பள்ளி, அங்கன்வாடி போன்றவை உள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதிக அதிர்வலையுடன் கூடிய செல்போன் கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள், செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் இடத்தில் ஒன்று கூடி நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாதர்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதனையடுத்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story