அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியல்


அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:46 PM GMT)

குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி

அரகண்டநல்லூர்

குடிநீர் வினியோகம் பாதிப்பு

அரகண்டநல்லூர் அருகே உள்ள சு.பில்ராம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வேடாளம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் தலைமையில் காலி குடங்களுடன் அந்த வழியாக வந்த டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் கனகாவின் கணவர் பழனி சாலைமறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாலை நேரத்துக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருக்கோவிலூர்-கண்டாச்சிபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் நேரில்வந்து விசாரணை நடத்தினர்.


Next Story