புவனகிரியில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி புவனகிரியில், கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்
புவனகிரி,
புவனகிரி தாலுகா அலுவலகத்தில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பின்னலூர் கிராம மக்கள் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் நெடுஞ்சேரலாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் பின்னலூர் கிராமத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு இலவச வீட்டுமனைபட்டா வழங்க கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் புவனகிரி தாசில்தாரை சந்தித்து மனு கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story