அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்


அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
x

திண்டுக்கல் அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது புளிய ராஜக்காபட்டி கிராமம். இங்கு குடிநீர், கழிவுநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டு குட்டத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.

இதேபோல் குட்டத்துப்பட்டி ஊராட்சி தலைவர் வேல்கனி அரிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் பிலவேந்திரன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வார காலத்துக்குள் புளியராஜக்காப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள்அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story