விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உற்சவ விழா


விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உற்சவ விழா
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:45 PM GMT)

விழுப்புரம் சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உற்சவ விழா நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் நாப்பாளைய தெரு சந்திப்பில் பிரசித்தி பெற்ற சண்டபிரசண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 130-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது.

இதையொட்டி காகுப்பம் அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று கரகம் எடுத்து வந்து வீதியுலா நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாகை வார்த்தல் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது.


Next Story