விழுப்புரம், கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை: மீன்வளத்துறை அறிவிப்பு
விழுப்புரம், கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்தடுத்த நாட்களில் காற்றழுத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தெற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள நிலையில் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story