விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
x

கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது

சென்னை,

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

கன மழை காரணமாக விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டிடங்களின் நிலைத்தன்மை, மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல்,பள்ளி திறக்கப்படும் போது பாதுகாப்பான கல்வி சூழலை உறுதி செய்திடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்

பள்ளிவளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கம் வேண்டும் என மாவட்டகலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story