விழுப்புரம்: மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கோலாகலம்..!


விழுப்புரம்: மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கோலாகலம்..!
x

விழுப்புரம், மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெற்று வருகிறது.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் உள்ள மயில் வடிவ மலையில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தி வருகிறார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

விழாவில் நாளை(புதன்கிழமை) இரவு தெப்பல் உற்சவமும், நாளை மறுநாள் இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 7-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடக்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story