விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்


விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் இன்று நடைபெறுகிறது விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

விழுப்புரம்

செஞ்சி

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமையில் திண்டிவனம் எல்.கே. டவரில் இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு செய்வது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியின் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேருர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story