108 ஆம்புலன்ஸ் சேவையில் 4-ம் இடத்தை பிடித்த விழுப்புரம்


108 ஆம்புலன்ஸ் சேவையில் 4-ம் இடத்தை பிடித்த விழுப்புரம்
x
தினத்தந்தி 16 Oct 2022 6:45 PM GMT (Updated: 16 Oct 2022 6:46 PM GMT)

தமிழக அளவில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் 4-ம் இடத்தை பிடித்த விழுப்புரம் இதுவரை 6½ லட்சம் பேர் பயனடைந்துள்ளனா்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் வாரியாக தரவரிசை பட்டியலை 108 தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவையின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 34 சாதாரண ஆம்புலன்சுகள், 2 அதிநவீன ஆம்புலன்சுகள் மற்றும் 1 அதிநவீன பச்சிளம் குழந்தை பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவை தவிர 2 இருசக்கர அவசர உதவி வாகனங்களும் என மொத்தம் 39 ஆம்புலன்சுகள் உள்ளன.

அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் வருகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரத்து 843 பேர் பயனடைந்துள்ளனா். அதில் பிரசவ சிகிச்சைகளுக்காக பயணித்த 1 லட்சத்து 95 ஆயிரத்து 334 கா்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனா்.

மேலும் சாலை விபத்துகளில் சிக்கிய 1 லட்சத்து 14 ஆயிரத்து 712 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி ஏராளமானோர் பயனடைந்துள்ளனா். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story