பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்


பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொறியியல் பணி காரணமாக விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

விழுப்புரம்

தெற்கு மத்திய ரெயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854) காட்பாடி-திருப்பதி இடையே அக்டோபர் 1-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். இதேபோல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திருப்பதி- விழுப்புரம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16853) திருப்பதி- காட்பாடி இடையே அக்டோபர் 1-ந் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும். இந்த தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story