விநாயகர் சதுர்த்தி: ரேஷன் கடைகளுக்கு வருகிற 18-ந்தேதி விடுமுறை


விநாயகர் சதுர்த்தி: ரேஷன் கடைகளுக்கு வருகிற 18-ந்தேதி விடுமுறை
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு வருகிற 18-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு சார்பில் வருகிற 17-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மாற்றி வருகிற 18-ந்தேதிதான் விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 18-ந்தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

விநாயகா் சதுா்த்தி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் செப்டம்பா் 18-ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் பொது விடுமுறைப் பட்டியலில் விநாயகா் சதுா்த்தி பண்டிக்கைக்கான விடுமுறையானது, செப்டம்பா் 17-ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தேதியை செப்டம்பா் 18-ஆக மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, ரேஷன் கடைகளுக்கும் பொருந்தும்படி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story