விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்


விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
x

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்

திருப்பூர்

தளி,

உடுமலை பகுதியில் சாைலயோரம் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடபப்படுகிறது. களிமண், சாணம், மஞ்சள் என கைப்பிடி அளவு எடுத்து பிள்ளையாரை உருவாக்கி வழிபாடு செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குளங்கள், நீர் தேக்கங்கள் போன்றவை உருவாக்கப்படுவதற்கு முன்பு மழைக் காலங்களில் ஆற்றில் சென்று கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீர்இருப்பை உயர்த்துவதில் களிமண்ணின் பங்கை கண்டறிந்த நமது முன்னோர்கள் பிற்கால சந்ததிகள் பயன் அடையும் நோக்கில் ஆன்மீகம் அறிவியலும் கலந்த கலவையாக களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்குப் பின்பு ஆற்றில் கரைக்கும் பழக்கத்தை உருவாக்கினார்கள்.

இதனால் ஆடிப்பெருக்கின் போது ஆற்றில் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு ஆங்காங்கே சிலைகளின் வடிவத்தில் படிந்துள்ள களிமண்ணால் தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தும் உன்னத பணியை செய்தது. சிலைகளை உற்பத்தி செய்வதன் மூலம் கைவினை தொழில் வளர்ச்சி அடைந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருகியதுடன் ஆற்றில் தண்ணீர் தடுக்கப்பட்டதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் சேமிக்கப்பட்டது.

விற்பனை

இந்த மாதம் 31-ம் தேதி வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.இதைத் தொடர்ந்து சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாகவே வட மாநிலத்தவர் உடுமலை பகுதியில் முகாமிட்டு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் உள்ளிட்ட விநாயகர் சிலைகளை சாலையின் ஓரங்களில் அமர்ந்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். விதவிதமான வண்ணங்களில் பல்வேறு வகையான தோற்றத்தில் அழகுற காட்சி அளிக்கும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.


Next Story