விதிகளை மீறியதாக 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விதிகளை மீறியதாக 21 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகள், கிளினிக், நர்சிங் ஹோம், மருத்துவ பரிசோதனைக்கூடங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் விதிமுறைகளை மீறியதாக, அதாவது எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 4 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 7 நிறுவனங்கள், மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 5 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள், காலணிகள், சிகரெட் லைட்டர்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் மால்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர்பாட்டில்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 7 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.