பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணி நியமனத்தில் விதிமீறலா? பதிவாளர் பாலகுருநாதன் விளக்கம்


பெரியார் பல்கலைக்கழகத்தில்  நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணி நியமனத்தில் விதிமீறலா?  பதிவாளர் பாலகுருநாதன் விளக்கம்
x

பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணி நியமனத்தில் விதிமீறலா? என்பது குறித்து பதிவாளர் பாலகுருநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம்

கருப்பூர்,

சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ஆகிய பணியிடங்கள் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த நிலையில் இந்த பணிகளுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றாமல் பணி நியமனம் செய்யப்படுவதாகவும், விதிமீறல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

இந்த புகார் குறித்து பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பாலகுருநாதன் நேற்று விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகள் 2004-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டவை ஆகும். இந்த நிலையில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு காலியாகும் பணியிடங்கள் பொதுப்பிரிவில் தொடங்கி தான் நிரப்பப்பட வேண்டும் என்று கடந்த 2007-ம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது காலியாக உள்ள நூலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் 2007-ம் ஆண்டுக்கு பிறகு காலியானதால் பொதுப்பிரிவின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. எனவே இதில் எந்தவித இட ஒதுக்கீடு விதிமீறலும் இல்லை என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story