விருதுநகர்: 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி


விருதுநகர்: 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி
x

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினால் ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு ஆலைகள் அதிகம் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் இன்று அனுமதி அளித்துள்ளார்.

தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர், விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 More update

Next Story