விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம்


விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடம்
x

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.

விருதுநகர்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வை 12,678 மாணவர்களும், 12,768 மாணவிகளும் ஆக மொத்தம் 25,446 பேர் எழுதினர். இதில் 11,905 மாணவர்களும், 12,514 மாணவிகளும் ஆக மொத்தம் 24, 419 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.9 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.01 ஆகும். சராசரி மொத்த தேர்ச்சி சதவீதம் 95.95 ஆகும். இதையடுத்து விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.


1 More update

Next Story