முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: விருதுநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: விருதுநகரில் நாளை போக்குவரத்து மாற்றம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு விருதுநகரில் நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) விருதுநகர் வருகை தர உள்ளார். ஆதலால் கீழ்க்கண்ட நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங்ரோடு கருப்பசாமி கோவிலில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) இடது புறமாக திரும்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டையாபுரம், கோவில்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் கப்பலூர் பாலத்தில் இருந்து இடது புறமாக திரும்பி மதுரை ரிங் ரோட்டில் அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் 4 வழி சாலையில் வலது புறம் திருப்பி ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எட்டயாபுரம், கோவில்பட்டி செல்ல வேண்டும்.

இதேபோன்று காலை 8 மணி முதல் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் கோவில்பட்டி மணியாச்சி, திட்டன்குளம் வழியாக எட்டயபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மதுரை, திண்டுக்கல் செல்ல வேண்டும்.

மதியம் 1 மணி முதல் கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் சாத்தூர் வெங்கடாசலபுரம் போலீஸ் சோதனை சாவடி வழியாக இடது புறமாக திருப்பி மேட்டமலை, மீனம்பட்டி, சிவகாசி, பிள்ளைக்குழி சந்திப்பிலிருந்து வலது புறமாக திருப்பி திருத்தங்கல் மத்திய சேனை சந்திப்பு, ஆமத்தூர் நந்தா ஓட்டல் சந்திப்பில் இடது புறமாக திருப்பி மதுரை செல்ல வேண்டும்.

கோவில் புலிக்குத்தி விலக்கிலிருந்து இடது புறமாக திருப்பி சங்கரலிங்கபுரம் மத்திய சேனை சந்திப்பில் வலது புறமாக திருப்பி ஆமத்தூர் நந்தா ஓட்டல் சந்திப்பில் இடது புறமாக திருப்பி மதுரை செல்ல வேண்டும். மதுரையிலிருந்து சாத்தூர் நோக்கி செல்லும் இலகுரக வாகனங்கள் சிவகாசி சர்வீஸ் ரோடு வழியாக இடது புறமாக திருப்பி எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பு, அல்லம்பட்டி சந்திப்பு, பாலவனத்தில் வலது புறமாக திருப்பி மெட்டுக்குண்டு, சென்னல் குடி, கோட்டூர், ராம்கோ சாலையில் வலது புறமாக திருப்பி நான்கு வழிச்சாலையில் இடது புறமாக திருப்பி சாத்தூர் நோக்கி செல்ல வேண்டும்.

இவ்வாறு போலீஸ் நிர்வாகம் கூறியுள்ளது.


Next Story