தொல்லியல் படிமங்களை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும்


தொல்லியல் படிமங்களை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும்
x

தொல்லியல் படிமங்களை பார்வையிட வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட பகுதிகள் ஆதிகாலத்தில் கடல் பகுதியாக இருந்ததால், இப்பகுதிகளில் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் படிமங்கள் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. அதன் அடிப்படையில், இப்பகுதிகளை உள்ளடக்கிய இடங்களை தொல்லியல் புதைப்படிவ பூங்கா அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. படிமங்கள் அதிகம் காணப்படும் இடங்களில் அதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற இடங்களை அவ்வவ்போது பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தொல்லியல் படிமங்களை பார்வையிட்டு, தேவைப்படின் மாதிரிகளை சேகரித்து எடுத்து செல்கின்றனர். இதனால் சில அரிய தொல்லியல் படிமங்களின் மாதிரி பிற்காலத்தில் வரும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.

ஆகவே, அரியலூர் மாவட்ட நிர்வாகம் இதனை முறைப்படுத்தி, பார்வையிட வருபவர்கள் இணையதள வாயிலாக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் https:// service online.gov.in / tamilnadu /direct Apply.do? serviceId=753. இது குறித்த மேலும் விவரங்களை பெற தமிழ்நாடு அரசு சிமெண்டு கழக (அரியலூர்) புவியியலாளரை 919566947917 என்ற செல்போன் எண்ணிலும், geoariper@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story