விஸ்வநத்தம் ஓடையை தூர்வார வேண்டும்


விஸ்வநத்தம் ஓடையை தூர்வார வேண்டும்
x

விஸ்வநத்தம் ஓடையை தூர்வார வேண்டும் என பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விஸ்வநத்தம் ஊருக்குள் செல்லும் கழிவுநீர் ஓடையில் கலக்கிறது. கழிவுநீர் ஆறுபோல் அந்த பகுதியை கடந்து செல்கிறது. ஏற்கனவே இந்த கழிவுநீர் ஓடை குறுகிய அளவில் இருப்பதால் பல நேரங்களில் ஓடையின் வெளி பகுதியில் கழிவுநீர் செல்கிறது. மழைக்காலங்களில் விஸ்வநத்தம் பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் மேல் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் சிவகாசி-விஸ்வநத்தம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஓடையை உடனே தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

இதுகுறித்து சிவகாசி கமிஷனர் சங்கரனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, விஸ்வநத்தம் ஓடையில் கழிவுநீர் செல்வதில் பிரச்சினை என தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட இடத்தை பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜூடன் சென்று ஆய்வு செய்தேன். அந்த ஓடையை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் தொடங்கி தரமாக செய்யப்படும் என்றார்.

விஸ்வநத்தம் பஞ்சாயத்து தலைவர் சக்திவேல்நாகராஜியிடம் கேட்ட போது, பொதுமக்கள் கூறிய புகார் குறித்து யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story