அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா


அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா
x

அய்யனார் கோவிலுக்கு புரவி எடுப்பு விழா நடந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் சத்ரு சம்கார கோட்டை என்று அழைக்கப்படும் எஸ்.எஸ். கோட்டையில் உள்ள படைத் தலைவி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சாமி ஆட்டத்துடன் விழா நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று விநாயகர் கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், எஸ்.எஸ். கோட்டை கிராமத்தார்கள் பால்குடம் எடுத்து வந்தனர். சியா முத்துப்பட்டியில் உள்ள படைத்தலைவி அம்மனுக்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப் பட்டது. தொடர்ந்து புரவி எடுப்பு விழா நடை பெற்றது. முன்னதாக மண்ணால் செய்யப்பட்ட படைத் தலைவி அம்மன் சிலை, சியா முத்துப்பட்டி குலால வம்சாவளி கோவில் வீட்டில் இருந்து கிராமத்தார்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 13 புரவிகள் தயாராக வைக்கப் பட்டு இருந்தது. கிராமத்தார்கள் முறையாக சாமியாடிகளை வரவழைத்து சாமி அழைத்து, சாமி ஆட்டம் ஆடி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பூத்தட்டு எடுக்கப் பட்டது. புரவிகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) கருக்குமடை அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப் படுகிறது. தொடர்ந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி நடைபெறு கிறது. ஏற்பாடுகளை எஸ்.எஸ். கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story