வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து


வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து
x

கள்ளக்குறிச்சி தனியார் லாட்ஜில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சபரிநாதன்(வயது 26). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் மூர்த்தி(32), உலகப்பசெட்டி தெரு தங்கவேல் மகன் கைலாசம் என்கிற மணிகண்டன், ராமலிங்கம் மகன் ரவி(38), ஏமப்பேர் கார்த்தி, ராம்குமார்(28), கவரைதெரு பாலு மகன் பிரபு(25) ஆகிய 6 பேரும் தனியார் லாட்ஜிக்கு சென்று சபரிநாதனைஆபாசமாக திட்டி தாக்கினர். பின்னர் மணிகண்டன், ரவி ஆகியோர் சபரிநாதனை பிடித்துக் கொள்ள. அவரது வயிற்றில் மூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த சபரிநாதனை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி அறிந்த சபரிநாதனின் உறவினர்கள், நண்பர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அண்ணாநகரில் உள்ள சேலம் மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கள்ளக்குறிச்சி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் மூர்த்தி, கைலாசம் என்கிற மணிகண்டன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story