தர்மபுரியில்மாநில அளவிலான கைப்பந்து போட்டி


தர்மபுரியில்மாநில அளவிலான கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 2 Oct 2023 12:30 AM IST (Updated: 2 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் கைப்பந்து போட்டி தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோவை, நெல்லை, கடலூர் ஆகிய 8 மண்டலங்களில் இருந்து 64 அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடம் பிடித்த அணியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் வேலூர் உடற்கல்வி ஆசிரியர்கள் வில்லிங்டன், சிவக்குமார், ஜெயபிரகாஷ், தம்பிதுரை, தேவேந்திரன், சசி, தேன்மொழி, அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story