மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி


மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
x

சிவகங்கை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

சிவகங்கை மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.

கைப்பந்து போட்டி

சிவகங்கை மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் இளை யான்குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரியின் முன்னாள் கைப்பந்து வீரர்கள் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு முன்னாள் மாணவர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முன்னாள் மாணவர் அணி முதலிடத்தில் வெற்றிபெற்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி 2-வது இடத்தையும், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி 3-வது இடத்தையும், கோவிலூர் ஆண்டவர் உடற் கல்வியியல் கல்லூரி அணி 4-வது இடத்தையும் பிடித்து அதற்கான கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகள் முறையே ரூ.4000, 3000, 2000 மற்றும் 1000 பெற்றனர்.

தேர்வு

போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரராக அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வீரர் சல்மான் பாரீஸ் பெற்றார். சிறந்த தடுப்பாட்டக்காரர் மற்றும் தாக்குதல் ஆட்டக்காரராக டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் விக்னேஷ் மற்றும் கபில்தேவ் ஆகியோர் தேர்வு பெற்றனர். போட்டியை கல்லூரிச் செயலர் ஜபருல்லா கான் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் காளீஸ்வரன், செயலாளர் கோபிநாத், போதி சர்வதேச பள்ளியில் தாளாளர் மணிஷ், டாக்டர் ஜாகிர் உசேன், கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர், சுயநிதி பாட பிரிவு இயக்குனர் சபினுல்லாஹாகான் மற்றும் டாக்டர் சாகிர் உசேன், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முகமது முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

பாராட்டு

போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், உடற் கல்வி ஆசிரியர்கள் காஜா நஜ்முதீன், வெற்றி மற்றும் ஜென்சி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற மாணவர ்களை கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்தி பாராட்டினர்.

1 More update

Next Story