திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம்


திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம்
x

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

குத்தாலம்;

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 13-ந் தேதி ஒரு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் குத்தாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோனேரிராஜபுரம் மற்றும் பழையகூடலூர் ஊராட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக திருமண விழாவில் கலந்து கொண்டு உணவருந்திய 30-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி- மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல உபாதைகள் ஏற்பட்டன. இதனால் அவர்கள் கோனேரிராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை

மேலும் குத்தாலம் கும்பகோணம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, குத்தாலம் தாசில்தார் இந்துமதி, குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்டோர் கோனேரிராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினா்.


Next Story