ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆதார் காட்டி வாக்களிக்கலாம் - சத்ய பிரதா சாகு


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஆதார் காட்டி வாக்களிக்கலாம்  -  சத்ய பிரதா சாகு
x

ஆதார் அட்டையை காட்டி வாக்களிக்க வரும் வாக்காளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிற்பகல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 59.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோடு கிழக்கில் மொத்தம் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவ முக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீத தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கில் மை விவகாரத்தில் எந்தவித குறைபாடும் இல்லை. இந்தியா முழுவதுமே ஒரே இடத்தில் இருந்து தான் மை விநியோகம் செய்யப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு என எவ்வித புகாரும் வரவில்லை. கிடைக்கப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இடைத்தேர்தலில் ஆதார் அட்டையை காட்டி வாக்கு செலுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.


Next Story