வேலூர் பேரூராட்சியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடக்கம்


வேலூர் பேரூராட்சியில்  வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடக்கம்
x

வேலூர் பேரூராட்சியில் வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடக்கம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

வேலூர் பேரூராட்சி அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகாந்த், வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் படிவம் 6 பி‌-யை வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள படிவம் 6பி-யை பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்க அலுவலர்களிடம் மற்றும் அந்தந்த பகுதி பேரூராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜா, வருவாய் ஆய்வாளர் லட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வி, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்


Next Story