வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடக்கம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி   ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடக்கம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் லலிதா கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் அடையாள அட்டை

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த பணி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தாமாக முன் வந்து இணையதளத்தின் வாயிலாக '6 பி' படிவத்தினை பூர்த்தி செய்து தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களின் வீடுகளுக்கு நேரடியாக வரும்போது படிவம் '6 பி'யினை பெற்று 12 இலக்க ஆதார் எண்ணை படிவத்தில் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.

கள்ள ஓட்டுப்பதிவு

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டால் கள்ள ஓட்டுப்பதிவை குறைக்க முடியும். ஆதார் எண் இணைக்க விருப்பமில்லாதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்னை இணைக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story