1,998 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன


1,998 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
x

நாமக்கல்லில் இருந்து 1,998 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை மற்றும் நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலக மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த 15 ஆண்டுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்-2 வகை பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் 1,366, கட்டுப்பாட்டு கருவிகள் 621 மற்றும் M-3 வகையிலான பழுதடைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் 8 மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள் 3 என மொத்தம் 1,998 பழைய வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மூலம் பெங்களுருவுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, நாமக்கல் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகந்தி, தாசில்தார் (தேர்தல்) திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story