மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை,

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குத்துச்சண்டை வீரரை நேரில் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கு 4848 செவிலியர்கள் மாதம் ரூ. 14 ஆயிரம் ஊதியம் என்ற வகையில் பணியமர்த்தப்பட்டனர். அந்த 4848 செவிலியர்களுக்கு ரூ. 14 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் என்ற வகையில் ஊதியம் உயர்த்தப்படுகிறது' என்று கூறினார்.


Next Story