ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும்


ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும்
x

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும் என்று மின் ஊழியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தர்மபுரி மாவட்ட மாநாடு சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஜோதி, சிவராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெகநாதன், ஜீவா, காளியப்பன், சீனிவாசன், ஜெயக்குமார், வெண்ணிலா, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மின்சார சட்டத்திருத்தம் 2021- ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும். நிறுத்தப்பட்ட பஞ்சப்படி, சரண்டர் போன்ற பண பயன்களை வழங்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிதாக தொடங்கிய துணை மின் நிலையங்களில் போதிய அளவில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும்


Next Story