தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 205 பேர் தொகுப்பூதிய பணியாளர்களாக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ரூ.4000 முதல் ரூ.5000 வரை சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை தொகுப்பூதிய ஊழியர்கள் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story