சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
போடியில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தேனி
போடி,
மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் பெருமாயி (வயது 57). இவர், போடி தென்றல் நகரில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த 10 நாட்களாக வசித்து வருகிறார். நேற்று காலை இவர், போடி பங்கஜம் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் 2 வாலிபா்கள் வந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது அந்த வாலிபா்கள் பெருமாயி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து பெருமாயி போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story