போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை


போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை
x

செய்யாறு அருகே பள்ளி மாணவிைய கர்ப்பமாக்கிய பெரியப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

செய்யாறு அருகே பள்ளி மாணவிைய கர்ப்பமாக்கிய பெரியப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி கர்ப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாணவியின் தாயார் சிகிச்சைக்காக வீரம்பாக்கம் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார், அவரிடம் விசாரித்ததில், தனது பெரியப்பா அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறினார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் பெரியப்பாவை தேடி வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் போலீசார் தன்னை கைது செய்யப்படலாம் என அறிந்த மாணவியின் பெரியப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story