வார்டு கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்ற ஆணையாளர் இடையூறு
சில நேரங்களில் நாங்கள் பேசும்போது என்னிடம் எல்லாவற்றையும் தெரிவிக்காதீர்கள் வெளியே செல்லுங்கள் என்று கடுமையாகவும் நடந்து கொள்கிறார்.
திருப்பூர் கலெக்டா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருமுருகன்பூண்டி நகராட்சி 1, 15, 19, 20, 24 ஆகிய வார்டு கவுன்சிலர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருமுருகன்பூண்டி நகராட்சி ஆணையாளாிடம் நாங்கள் வார்டு வளர்ச்சி பணிகள், அன்றாட நடவடிக்கைகள் குறித்து ேநரில் சந்தித்து முறையீடு செய்தால் எங்கள் வார்டு பிரச்சினைகளை அவர் காது கொடுத்து கேட்பதில்லை. சில நேரங்களில் நாங்கள் பேசும்போது என்னிடம் எல்லாவற்றையும் தெரிவிக்காதீர்கள் வெளியே செல்லுங்கள் என்று கடுமையாகவும் நடந்து கொள்கிறார்.நகராட்சியில் உள்ள 9 பொதுக்கழிப்பிடங்கள், 11 விளையாட்டு பூங்காக்கள் திருமுருகன்பூண்டி பேருராட்சியாக இருக்கும்போதும், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் உள்ளாட்சி அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய ஆணையாளர் பழைய நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது, நகராட்சி சார்பில் பராமரிக்கப்படாது என்று பணியை நிறுத்தி வைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஆணையாளரின் நடவடிக்கைகள் மக்களுக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகளின் மக்கள் பணியை முற்றிலும் தடுப்பதாக உள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.