வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்


வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

பச்சூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சூர் ஊராட்சியில் தலைவர் தியாகராஜன், துணைத் தலைவர் செல்வி கிருஷ்ணன் ஆகியோர் சரியான முறையில் நிர்வாகத்தை நடத்தவில்லை எனவும், ஊராட்சி சார்பில் டெண்டர் விடுவதை வார்டு உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை, செலவு கணக்குகள் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வார்டு உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், சிவகுமார், தம்பிதுரை, மகாலட்சுமி, இளவரசன், சிதம்பரம், லிங்கம்மா, மீனா ஆகிய 8 பேர் நேற்று மதியம் 12 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் கலீல் மாலை 4.30 மணியளவில் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.

தொடர்ந்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி கிருஷ்ணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவதாக உறுதி அளித்ததன் பேரில் இரவு 8 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பச்சூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story