வார்டு சபா கூட்டம்
திருக்கோவிலூரில் வார்டு கிராம சபா கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் வார்டு சபா கூட்டம் நடந்தது. இதற்கு நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு பொதுமக்கள், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும், கழிவு நீர் வாய்க்கால்களை தினசரி சுத்தம் செய்ய வேண்டும், வார்டு முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் எனக் கூறி கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்ற நகரமன்ற துணைதலைவர் உமா மகேஸ்வரி குணா, கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையாளர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் வார்டுக்குழு உறுப்பினர்கள் டி.குணா, எம்.கே.சங்கர், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story