27,500 டன் நெல் சேமிப்பு கிடங்குகள்


27,500 டன் நெல் சேமிப்பு கிடங்குகள்
x

தஞ்சை மாவட்டத்தில் மேற்கூரையுடன் கூடிய 27 ஆயிரத்து 500 டன் நெல் சேமிப்பு கிடங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் மேற்கூரையுடன் கூடிய 27 ஆயிரத்து 500 டன் நெல் சேமிப்பு கிடங்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சேமிப்பு கிடங்கு

தஞ்சை மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு உட்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம், மேற்கூரையுடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட ரூ.35.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் டன், சென்னம்பட்டியில் 2 ஆயிரத்து 500 டன், பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியில் 6 ஆயிரம் டன் என மொத்தம் 58 ஆயிரம் டன் கொள்ளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

இதில் பிள்ளையார்பட்டி, திட்டக்குடி, சென்னம்பட்டி ஆகிய இடங்களில் மொத்தம் 27 ஆயிரத்து 500 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.20.145 கோடியில் கட்டப்பட்டன. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கொள்முதல் நிலையம்

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் பிள்ளையார்பட்டியில் 31 ஆயிரம்டன் கொள்ளளவில் 31 கிடங்குகள் ரூ.15 கோடியே 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது பிள்ளையார்பட்டியில் மேலும் 50 ஆயிரம் டன் கிடங்கு கான்கிரீட் தளம், மேற்கூரையுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாகவும், பிள்ளையார் பட்டியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 11 ஆயிரம் டன் நவீன சேமிப்பு கிடங்குகள், 5 ஆயிரம் டன் சேமிப்பு கிடங்குகள் மூலமாகவும் மொத்தம் 66 ஆயிரம் டன் நெல் சேமிக்கலாம்.

மேலும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.62.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.12.50 கோடியில் கட்டுதவதற்கான அடிக்கல்லையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் நாட்டினார்.

இந்த தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.


Next Story