பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கைஅரூர் உதவி கலெக்டர் எச்சரிக்கை


பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கைஅரூர் உதவி கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2023 7:30 PM GMT (Updated: 15 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் உதவி கலெக்டர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி கடத்தூர், மொரப்பூர் மற்றும் முக்கியமான கிராம பகுதிகளில் அனுமதி இல்லாமல் பொது இடங்களில், கட்சி விளம்பர பலகைகள் மற்றும் தனிப்பட்ட பிறந்தநாள், குடும்ப நிகழ்வுகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகள் அல்லது விளம்பர பலகைகள் வைப்பதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். எந்த பொது இடத்தில் வைக்கப்படுகிறதோ அந்த துறையின் அதற்குரிய கட்டணத்தொகையை சம்பந்தப்பட்ட பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலை துறையிடம் செலுத்த வேண்டும். இதற்கு காவல்துறையின் தடையின்மைச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அனுமதி பெற்று விளம்பர பலகைகள் வைக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள், கட்சிகள் ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்த பின் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும். ஆனால் இவைகளை அகற்றாமல் நீண்ட நாட்களாக அதே இடத்தில் விட்டு விடுவதால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளனர்.


Next Story