தொடர் மழை காரணமாககிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தொடர் மழை காரணமாககிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2023 1:00 AM IST (Updated: 4 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி:

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 374 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 921 வினாடிக்கு கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 50.55 அடியாக இருந்தது. தொடர் மழையால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகமாகும் என்பதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆற்றை கடக்க வேண்டாம்

மேலும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 8 மணி நிலவரப்படி நெடுங்கல்லில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. போச்சம்பள்ளி-32.10, பாரூர்-29, பாம்பாறு அணை- 28, ஊத்தங்கரை-25.40, கே.ஆர்.பி. அணை- 24.20, பெனுகொண்டாபுரம் 5.20.


Next Story