ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.587 கோடியில் புதிய குடிநீர் திட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.587 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.587 கோடியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
புதிய குடிநீர் திட்டம்
புதிய அரசு மருத்துவமனை கட்டிடங்கள் திறப்புவிழா, ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட் டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் காவிரியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனியாக ரூ.587 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
முன்னேற்றம்
பின்தங்கிய பகுதி என கருதப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி எல்லோரும் தேடிவரும் வகையில் இந்த மாவட்டம் முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குனர் அனுமந்தராவ், மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, நகரசபை தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், பரமக்குடி சேதுகருணாநிதி, ராமநாதபுரம் நகரசபை துணை தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மலர்வண்ணன் நன்றி கூறினார்.