11,073 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்


11,073 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 11,073 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணை தரைப்பாலம் வழியாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 11,073 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் அணை தரைப்பாலம் வழியாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன மழை

தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 12,609 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து நேற்று 10,328 கனஅடியாக குறைந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 11,073 கனஅடி தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் இரு கரைகள் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், அணைக்குள் தரைப்பாலம் மூழ்கிய தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், அந்த வழியாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story