குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
மூலனூர்
கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வெள்ளகோவில் மூலனூர் குளத்துப்பாளையம் வழியாக தாராபுரம் குண்டடம்ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் மூலனூர் வெள்ளகோவில் செல்லும் சாலையில் புதுப்பை முத்துசாமி கோயில் மற்றும் நால்ரோடு அருகே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது கோடைகாலத்தில் எவ்வளவு குடிநீர் சாலையில் வீணாக செல்வதை வேதனையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் அந்த இடத்தில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது அந்த குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி எடுக்க வேண்டுமாய் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.