மேம்பால பணிக்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்தது


மேம்பால பணிக்கு பள்ளம் தோண்டியபோது  குடிநீர் குழாய் உடைந்தது
x

மேம்பால பணிக்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்தது

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் முதல் ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் டி.வி.எஸ். மேடு தனியார் மருத்துவமனை அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளிபாளையம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் ஒன்று உடைந்தது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறி சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளம் முழுவதும் நிரம்பி சாலையில் ஓடியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story