உப்பாறு அணையில் பாசனதிற்க்கா அமைச்சர்கள் தண்ணீர் திறப்பு


உப்பாறு அணையில் பாசனதிற்க்கா அமைச்சர்கள் தண்ணீர் திறப்பு
x

உப்பாறு அணையில் பாசனதிற்க்கா அமைச்சர்கள் தண்ணீர் திறப்பு

திருப்பூர்

குண்டடம்

குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு அணையிலிருந்து வலது மற்றும் இடது கரை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்கள் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொது மக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் உப்பாறு அணையில் இருந்து நேற்று முதல் 8 நாட்களுக்கு தண்ணீர் திறப்புக்கான விழா நடைபெற்றது விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன், மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உப்பாறு அனையில் தண்ணீரை திறந்து வைத்தனர். இதன் மூலம்

6 ஆயிரத்து 60 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், குண்டடம் திமுக ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ் வி செந்தில்குமார், உப்பாறு அணை பாசன விவசாய சங்க தலைவர் கொங்கு ராசு, உப்பாறு அணை செயற்பொறியாளர் மகேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர



Next Story