கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் திறக்கக்கூடாது; விவசாயிகள் கோரிக்கை


கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் திறக்கக்கூடாது; விவசாயிகள் கோரிக்கை
x

கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் திறக்கக்கூடாது; விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு

கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தியிடம் நேற்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மழை பெய்யாத காரணத்தினால் நடவுப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் முறைவைத்து தண்ணீர் திறந்தால் நடவு பணிகள் பாதிக்கப்படும். பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தற்போது 70 அடியாக உள்ளது. நீர் வரத்தும் குறைவாகவே உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மின் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு உள்ள தண்ணீரை பவானிசாகர் அணைக்கு திறந்துவிட தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், பருவமழை பெய்வதை கணக்கில் கொண்டு வரும் காலங்களில் விவசாயிகளிடம் கலந்துபேசி முறைவைத்து தண்ணீர் திறக்கலாம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story