நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் 4-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை


நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் 4-வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க தடை
x

தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

பென்னாகரம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த 4 நாட்களாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 50,000 கனஅடியாக தண்ணீர் வரத்து உள்ளதால் 4-வது நாளாக இன்றும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் அதிகாரிகள் அளவீடு செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் வருவாய்த் துறையினரும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர்.


Next Story